மாவட்ட செய்திகள்

மரணத்திலும் இணை பிரியாத தம்பதி: மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் சாவு திருவொற்றியூரில் சோகம் + "||" + Couple separated in death: Tragedy in Tiruvottiyur, death of husband in shock of wife's death

மரணத்திலும் இணை பிரியாத தம்பதி: மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் சாவு திருவொற்றியூரில் சோகம்

மரணத்திலும் இணை பிரியாத தம்பதி: மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் சாவு திருவொற்றியூரில் சோகம்
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
திருவொற்றியூர், 

சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் தங்கப்பன் (வயது 86). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி விசாலாட்சி (76). இவர்களுக்கு 3 மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக அன்பு கொண்டு இருந் தனர். விசாலாட்சி, கடந்த சில தினங்களாக உடல் நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று விசாலாட்சி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதிர்ச்சியில் கணவர் உயிரிழந்தார்

மனைவி இறந்த தகவல் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த தங்கப்பன், திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவருடைய மகன்கள், தந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், தங்கப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

மனைவி இறந்த தகவல் கேட்ட அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏறபடுத்தியது. பின்னர் இருவரது உடலும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது. மரணத்திலும் இருவரும் இணை பிரியாத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆர்.கே. பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சாவு
ஆர்.கே.பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
2. இறப்பிலும் இணை பிரியாத தம்பதி: கணவர் இறந்த சோகத்தில் துக்கம் தாங்காமல் மனைவி சாவு
கொடுங்கையூரில் கணவர் இறந்த சோகத்தில் துக்கம் தாங்காமல் மனைவி மயங்கி விழுந்து பலியானார்.
3. மரணத்திலும் இணை பிரியாத தம்பதி மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் சாவு
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் மாரடைப்பால் உயிரிழந்தார். சாவிலும் இணை பிரியாத தம்பதிகளின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
4. மரணத்திலும் இணை பிரியாத தம்பதி மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் சாவு
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் மாரடைப்பால் உயிரிழந்தார். சாவிலும் இணை பிரியாத தம்பதிகளின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
5. திருவள்ளூர் அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் சாவு
திருவள்ளூர் அருகே வாட்டர் ஹீட்டர் எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.