செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,618 பேர் பாதிப்பு 6 பேர் சாவு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,618 பேர் பாதிப்பு 6 பேர் சாவு
x
தினத்தந்தி 4 May 2021 1:07 AM GMT (Updated: 4 May 2021 1:07 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,618 பேர் பாதிப்படைந்தனர். 6 பேர் இறந்தனர்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 618 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84 ஆயிரத்து 638 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 74 ஆயிரத்து 405 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சைப் பலனின்றி ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 976 ஆக உயர்ந்தது. இதில் 9 ஆயிரத்து 257 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 835 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 615 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 36 ஆயிரத்து 25 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சைப் பலனின்றி 10 பேர் உயிரிழந்தனர். இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 564 உயர்ந்துள்ளது. 3 ஆயிரத்து 26 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரத்தில் 261 பேரும், குன்றத்தூரில் 164 பேரும், ஸ்ரீபெரும்புதூரில் 271 பேரும், வாலாஜாபாத் 52 பேரும், உத்திரமேரூர் 23 பேரும் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சை முடிந்து 482 பேர் வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story