மாவட்ட செய்திகள்

59 ஆண்டுகளுக்குப் பின்னர் பொன்னேரி தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ் + "||" + Congress captures Ponneri constituency after 59 years

59 ஆண்டுகளுக்குப் பின்னர் பொன்னேரி தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ்

59 ஆண்டுகளுக்குப் பின்னர் பொன்னேரி தொகுதியை கைப்பற்றிய காங்கிரஸ்
திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட பொன்னேரி தனி தொகுதியை 59 ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கைப்பற்றியது.
பொன்னேரி, 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, மாதவரம், செங்குன்றம், திருவொற்றியூர், ஆவடி, பூந்தமல்லி, மதுரவாயல் உள்ளிட்ட10 சட்டமன்ற தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.

அதிலும் குறிப்பாக பழம்பெரும் தொகுதியான பொன்னேரி தொகுதியில் 1962-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டிபி.ஏழுமலை வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து 1967-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க. 7 முறையும், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1 முறையும், தி.மு.க. 4 முறையும் வெற்றி பெற்றது.

வரலாற்று வெற்றி

அதன் பின்னர், கடந்த 59 ஆண்டுகளாக இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றியை ருசிக்காமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் துரைசந்திரசேகர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் 3-வது முறையாக போட்டியிட்ட பி.பலராமனை விட 9,389 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றியடைந்தார். இதனால் 59 ஆண்டுகளுக்குப் பின்னர், பொன்னேரி தனி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலில் தோற்றாலும் மனஉறுதியை இழக்கவில்லை; தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து சரி செய்வோம்; காங்கிரஸ்
தேர்தலில் தோற்றாலும் மனஉறுதியை இழக்கவில்லை. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை சரி செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
2. அரசியல் பணியை ஒதுக்கிவைத்து மக்களுக்கு உதவுங்கள்; காங். தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்
அரசியல் பணியை ஒதுக்கி வைத்து விட்டு மக்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய யூடியூப் சேனல் தொடக்கம்; 24-ந் தேதி முதல் ஒளிபரப்ப திட்டம்
காங்கிரஸ் கட்சி சார்பில் ‘ஐ.என்.சி. டி.வி.’ என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற 24-ந் தேதி முதல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
4. மேற்கு வங்காளத்தில் மோடி, அமித்ஷா பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்; தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் மனு
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் டெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர்.
5. ரபேல் ஒப்பந்தத்துக்கு ரூ.9 கோடி லஞ்சம் கொடுத்த தகவல் குறித்து விசாரணை; காங்கிரஸ் கட்சி போர்க்கொடி
ரபேல் ஒப்பந்தத்துக்கு ரூ.9 கோடி லஞ்சம் கொடுத்ததாக வெளியாகி இருக்கும் தகவல் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கி உள்ளது.