திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,207 பேர் பாதிப்பு இதுவரையில் 819 பேர் பலி


திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,207 பேர் பாதிப்பு இதுவரையில் 819 பேர் பலி
x
தினத்தந்தி 4 May 2021 1:25 AM GMT (Updated: 4 May 2021 1:25 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 4 பேர் இறந்துள்ளனர்.

திருவள்ளூர், 

கொரோனா வைரசின் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்திலும் கொரோனா இரண்டாவது அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600 தாண்டி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 207 பேர் பேர் கொரோனா வைரசஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 62 ஆயிரத்து 504 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 819 பேர் பலி

அவர்களில் 55 ஆயிரத்து 712 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 5 ஆயிரத்து 973 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 819 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 4 பேர் இறந்து உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை கடைப்பிடித்து, அடிக்கடி கைகளை கிருமி நாசினியை கொண்டு சுத்தம் செய்து பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட கலெக்டர் பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story