மாவட்ட செய்திகள்

ஜோலார்பேட்டை பகுதியில் ரெயில்வே ஊழியர் உள்பட 21 பேருக்கு கொரோனா + "||" + Corona for 21 people

ஜோலார்பேட்டை பகுதியில் ரெயில்வே ஊழியர் உள்பட 21 பேருக்கு கொரோனா

ஜோலார்பேட்டை பகுதியில் ரெயில்வே ஊழியர் உள்பட 21 பேருக்கு கொரோனா
ஜோலார்பேட்டை பகுதியில் ரெயில்வே ஊழியர் உள்பட 21 பேருக்கு கொரோனா
ஜோலார்பேட்டை

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் பி.சுமதி, ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி, அரசு டாக்டர் புகழேந்தி மற்றும் சுகாதார ஆய்வாளர் கோபி ஆகியோர் ஜோலார்பேட்டை பகுதியில் சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து கடைகளிலும் பணிபுரியும் மற்றும் உரிமையாளர்கள் அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்தனர்.

மேலும் ஜோலார்பேட்டை புதுப்பேட்டை, மேட்டுச்சக்கரகுப்பம், தென்றல் நகர், சாலை நகர், சாய் பாபா நகர், டி.வி.துரைசாமி நகர், தாமலேரிமுத்தூர், ஏலகிரிமலை, முக்கூர் பால்னாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் ரெயில்வே ஊழியர் உள்பட 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.  அதைத்தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று கிருமி நாசினி தெளித்து, அவர்களை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.