மாவட்ட செய்திகள்

சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு: குமரியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு அனுப்பப்பட்டன + "||" + Assembly, Parliamentary Election Counting Completed: Electronic voting machines were sent to the security room in Kumari

சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு: குமரியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு அனுப்பப்பட்டன

சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு: குமரியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு அனுப்பப்பட்டன
குமரி மாவட்டத்தில் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு அனுப்பப்பட்டன.
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு பொதுத் தேர்தலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலும் கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது.

இந்த தேர்தலுக்கு பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், சட்டசபை தேர்தலுக்கும், திங்கள்நகர் வேளாண்மை விற்பனை கூட பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் பயன்படுத்தப்பட்டன.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கோணம் அரசு என்ஜினீயரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து நேற்று வாகனங்களில் ஏற்றி பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் அவற்றை அங்குள்ள பாதுகாப்பு அறையில் அதிகாரிகள் வைத்து பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோல் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நாகர்கோவில் கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து பாதுகாப்பாக வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டு, திங்கள் நகரில் உள்ள வேளாண்மை விற்பனை கூட பாதுகாப்பு அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.