மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில்சிறப்பாக பணியாற்றிய 40 போலீசாருக்கு பாராட்டு + "||" + in thoothukudi district, praise to the 40 policeman who served so well

தூத்துக்குடி மாவட்டத்தில்சிறப்பாக பணியாற்றிய 40 போலீசாருக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில்சிறப்பாக பணியாற்றிய 40 போலீசாருக்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 40 போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சிறப்பாக பணியாற்றி வரும் போலீசார் பாராட்டப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த வாரம் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தவர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய 40 போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியின் போது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.