மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்முதியவர் தூக்கு போட்டு தற்கொலை + "||" + in thoothukudi, elderly man commits suicide by hanging

தூத்துக்குடியில்முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

தூத்துக்குடியில்முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள அய்யனடைப்பை சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சைக்கிளில் சென்ற போது கீழே விழுந்து விட்டாராம். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட அவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.