மாவட்ட செய்திகள்

காலபைரவருக்கு சிறப்பு பூஜை + "||" + Special Pooja for Kalabhairava

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

காலபைரவருக்கு சிறப்பு பூஜை
தேய்பிறை அஷ்மியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பட்டிவீரன்பட்டி:

தேய்பிறை அஷ்டமியையொட்டி, பட்டிவீரன்பட்டி பகவதியம்மன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் காலபைரவருக்கு பால், தேன், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. 

இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். இந்த பூஜையில், சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பைரவருக்கும் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.