கோடை மழை எதிரொலி: நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை


கோடை மழை எதிரொலி: நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை
x
தினத்தந்தி 4 May 2021 2:43 PM GMT (Updated: 4 May 2021 2:43 PM GMT)

பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 126.28 அடியாகும். பெரியகுளம் பகுதி மற்றும் சோத்துப்பாறை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்தது. 
இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து நீர்மட்டம் 124.31 அடியானது. 
உபரிநீர் வெளியேற்றம்
இந்நிலையில் நேற்று காலை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து அணையின் மொத்த உயரமான 126.28 அடி நிரம்பி வழிய தொடங்கியது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 114 கனஅடியாக இருந்தது. இது அப்படியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் வராக நதியில் செல்கிறது. இதையடுத்து வராக நதிக்கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story