மாவட்ட செய்திகள்

திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து + "||" + Trichy Thiruvananthapuram Intercity Express train cancellation

திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து

திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து
திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் 15ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை, மே-
நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. 
இதற்கிடையே விமானம் மற்றும் ரெயில்களில் செல்லும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல, பிற மாநிலங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் பயணிகளும் ரெயில் நிலையங்களில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். 
இந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பெரும்பாலான ரெயில்களின் இருக்கைகள் காலியாக செல்கின்றன. அதனை தொடர்ந்து, மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரெயில்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான பயணிகள் உள்ள ரெயில்களை நிறுத்த பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படவுள்ளது. 
இந்த ரெயில் (வ.எண்.02627/02628) வருகிற 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இரு மார்க்கங்களிலும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, மதுரை-சென்னை தேஜஸ் ரெயில் ரத்து குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே, நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக பெங்களூரு வரை இயக்கப்படும் ரெயில் நாளை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
--------------------