மாவட்ட செய்திகள்

வாணியம்பாடியில் சுகாதாரமற்ற முறையில் கொரானா சிகிச்சை மையம் + "||" + Corona treatment center in unhygienic manner

வாணியம்பாடியில் சுகாதாரமற்ற முறையில் கொரானா சிகிச்சை மையம்

வாணியம்பாடியில்  சுகாதாரமற்ற முறையில் கொரானா சிகிச்சை மையம்
வாணியம்பாடியில் உள்ள கொரோனா சிகிசிசை மையம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வாணியம்பாடி

சுகாதாரமற்ற கொரோனா சிகிச்சை மையம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 118 பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா சிகிச்சை மையத்தில் தினமும் இருமுறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அங்கு உள்ள குப்பை கழிவுகளை அடிக்கடி அப்புறப்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு சுகாதார துறை கூறியுள்ளது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக அங்கு கிருமி நாசினி தெளிக்க யாரும் வரவில்லை என்றும், அங்கு சேரும் குப்பை கழிவுகளை அகற்றாததால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது என்றும், அங்கு துர்நாற்றம் வீசுவதால் மேலும் இங்கு உடல் நல பாதிப்புகள் அதிகமாகும் என்றும் அங்கு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் நகராட்சி நிர்வாகம் மீது குற்றச்சாட்டுகள் கூறுகின்றனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மேலும் அங்கு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் உணவு உள்ளிட்ட அனைத்தும் வழங்கி வந்தாலும் சில நோயாளிகளுக்கு உறவினர்கள் மூலம் வீட்டில் இருந்து உணவு வழங்கப்படுகிறது. 

கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்க வரும் உறவினர்கள் கொரோனா பரவலின் தாக்கம் பற்றி சிறிதும் உணராமல் நுழைவு வாயிலில் கொடுத்து விட்டு செல்லாமல், நோயாளிகள் சிகிச்சை பெரும் இடத்திற்கு நேரடியாக சென்று அவர்களை சந்தித்து உணவு வழங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.