மாவட்ட செய்திகள்

புதிதாக 1509 பேருக்கு கொரோனா + "||" + Corona for 1509 newcomers

புதிதாக 1509 பேருக்கு கொரோனா

புதிதாக 1509 பேருக்கு கொரோனா
புதிதாக 1509 பேருக்கு கொரோனா
கோவை

 கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக 1,509 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82 ஆயிரத்து 646 ஆக உயர்ந்துள்ளது.

கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 1,105 பேர் நேற்று ஒரே நாளில் குணமாகி வீடு திரும்பினர். 

இதுவரை மாவட்டத்தில் 74 ஆயிரத்து 877 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 8,596 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதவிர கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 62 வயது மூதாட்டி, 55 வயது பெண், 47 வயது ஆண், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 79 வயது மூதாட்டி ஆகிய 4 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 
இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 733 ஆக உயர்ந்தது.