மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளிலும் 3-வது இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் + "||" + naam thamizhar party 3rd place

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளிலும் 3-வது இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளிலும் 3-வது இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்
நாமக்கல் மாவட்டத்தில் 3-வது இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பிடித்தனர்.
நாமக்கல்,

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்று உள்ளனர். இந்த கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து களம் கண்டது. நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளிலும் இந்த கட்சியின் வேட்பாளர்கள் 71 ஆயிரத்து 962 வாக்குகளை பெற்று உள்ளனர்.

அதன்படி ராசிபுரம் தொகுதியில் 11,295 வாக்குகளும், சேந்தமங்கலம் தொகுதியில் 11,654 வாக்குகளும், நாமக்கல் தொகுதியில் 10,122 வாக்குகளும், பரமத்திவேலூர் தொகுதியில் 11,684 வாக்குகளும், திருச்செங்கோடு தொகுதியில் 13,967 வாக்குகளும், குமாரபாளையம் தொகுதியில் 13,240 வாக்குகளும் அக்கட்சி வேட்பாளர்கள் பெற்று உள்ளனர். 6 தொகுதிகளிலும் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 3-வது இடத்தை பிடித்து உள்ளனர்.