மாவட்ட செய்திகள்

வாலிபர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி + "||" + Two people including a young man were killed in the corona

வாலிபர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி

வாலிபர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி
திண்டுக்கல் மாவட்டத்தில் வாலிபர் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்
திண்டுக்கல்: 

 நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த 35 வயது வாலிபருக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. 

இதையடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. 

இதனால் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். 


இதேபோல் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 70 வயது முதியவருக்கு கடுமையான இருமல், காய்ச்சல் ஏற்பட்டது. அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் திண்டுக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 அவரும் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். 

இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 214 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் நேற்று மேலும் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

இதைத்தொடர்ந்து அவர்கள் அரசு மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 16 ஆயிரத்து 648 ஆக உயர்ந்தது. அதேநேரம் 180 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 1,588 பேர் சிகிச்சையில் உள்ளனர்.