மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்வாலிபருக்கு அரிவாள் வெட்டு + "||" + stickle cut of teenager, near thoothukudi.

தூத்துக்குடியில்வாலிபருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில்வாலிபருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்தவர் இனிகோராஜா (வயது 49). இவர் மதுபோதையில் டாஸ்மாக் கடை அருகே சிறுநீர் கழித்தாராம். இதனை அந்த பகுதியை சேர்ந்த கண்ணன் (25) என்பவர் கண்டித்தாராம். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து கண்ணன், அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த இனிகோ ராஜா, கண்ணனை அரிவாளால் வெட்டினாராம். இதில் காயம் அடைந்த கண்ணன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கூடுவாஞ்சேரி அருகே, வாலிபருக்கு அரிவாள் வெட்டு - 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
கூடுவாஞ்சேரி அருகே வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக போலீசார் 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.
2. வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்
வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்