வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடைவிழா


வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கொடைவிழா
x
தினத்தந்தி 4 May 2021 3:31 PM GMT (Updated: 4 May 2021 3:31 PM GMT)

வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் கோடைவிழா நடந்தது.

உடன்குடி:
பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோவில் சித்திரை மாத கொடை விழா 3 நாட்கள் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அம்மன், விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.  நேற்று பகல் 1 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், கும்பம் வீதியுலா, மதியம் அன்னதானம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு செங்கிடகார சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இன்று (புதன்கிழமை) காலையில் கொடை விழா நிறைவு பூஜை, வரிதாரர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. கோரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊர் முழுவதும் மற்றும் கோவிலை சுற்றி அடிக்கடி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நிகழ்ச்சிகள் அனைத்தும் பக்தர்கள் இல்லாமல் நடந்தது.

Next Story