மாவட்ட செய்திகள்

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 4500 பேரிடம் சளி பரிசோதனை + "||" + Cold test in 4500 people in Sultanpet Union

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 4500 பேரிடம் சளி பரிசோதனை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 4500 பேரிடம் சளி பரிசோதனை
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 4500 பேரிடம் சளி பரிசோதனை
சுல்தான்பேட்டை


சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாரப்பட்டி, வதம்பச்சேரி, பாப்பம்பட்டி, செலக்கரிச்சல், செஞ்சேரிப்புத்தூர், குமாரபாளையம், அப்பநாயக்கன்பட்டி,ஜல்லிபட்டி, பூராண்டம்பாளையம், தாளக்கரை,மலைப்பாளையம் உள்பட மொத்தம் 20 ஊராட்சிகள் உள்ளன.

 இந்த ஊராட்சிகளில் ஒருலட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
ஒன்றியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இரண்டாவது அலையில்தற்போது 190 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா பரவலைதடுக்கும் வகையில் ஒன்றியத்தில் வட்டார மருத்துவஅலுவலர் டாக்டர் வனிதா, சுகாதார ஆய்வாளர்ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அடங்கிய சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கொரோனாவை கண்டறிந்து சிகிச்சைஅளிக்கும் பொருட்டு ஒன்றியத்தில் சுகாதாரத்துறையினரால் கொரோனா சளி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 4 ஆயிரத்து 500 பேரிடம் சளிப்பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. 

பொதுமக்களிடம் பெறப்படும் சளி மாதிரிகள் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி,கோவை இ.எஸ். ஐ. ஆஸ்பத்திரிகளில்உள்ள ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. 

இதில், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப் படுகிறது. ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் என 30 பேரிடம் கொரோனாசளி பரிசோதனை நடத்தப்படுகிறது. 
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.