மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து தகராறு செய்த 5 பேர் கைது + "||" + 5 arrested for breaking into government hospital

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து தகராறு செய்த 5 பேர் கைது

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து தகராறு செய்த 5 பேர் கைது
பழனியில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து தகராறு செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பழனி: 

பழனி ராஜாஜி சாலையில் நேற்று முன்தினம் இரவு இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 

இதில் அரிமா நகரை சேர்ந்த ஹரீஷ் (வயது 27) என்பவர் காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இந்த நிலையில் ராஜாஜி சாலையை சேர்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ் (23), நாகராஜ் மகன் பாபு (25), செல்வம் மகன் விஜயகுமார் (23), கோபால் மகன் முத்து (24), கோபி மகன் வெங்கடேஷ் (24) ஆகியோர் மருத்துவமனைக்குள் புகுந்து ஹரீசிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. 

இதில் மருத்துவமனையில் இருந்த சில பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. 


இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.