மாவட்ட செய்திகள்

நாமகிரிப்பேட்டை பகுதியில் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழை + "||" + rain

நாமகிரிப்பேட்டை பகுதியில் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழை

நாமகிரிப்பேட்டை பகுதியில் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழை
நாமகிரிப்பேட்டை பகுதியில் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
நாமகிரிப்பேட்டை,

நாமகிரிப்பேட்டையில் கடந்த சில வாரங்களாக வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இதனால் உஷ்ணம் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். இந்தநிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இதனால் பகலில் வெயில் வாட்டி வதைத்தது. இதனிடையே நாமகிரிப்பேட்டை பகுதியில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. 

பின்னர் சிறிது நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.