மாவட்ட செய்திகள்

நாமக்கல் உள்பட 5 சட்டசபை தொகுதிகளில் 1,247 தபால் வாக்குகள் செல்லாதவை; ராசிபுரத்தில் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன + "||" + postal votes

நாமக்கல் உள்பட 5 சட்டசபை தொகுதிகளில் 1,247 தபால் வாக்குகள் செல்லாதவை; ராசிபுரத்தில் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன

நாமக்கல் உள்பட 5 சட்டசபை தொகுதிகளில் 1,247 தபால் வாக்குகள் செல்லாதவை; ராசிபுரத்தில் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன
நாமக்கல் உள்பட 5 சட்டசபை தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகளில் 1,247 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. ராசிபுரம் தொகுதியில் அனைத்து வாக்குகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
நாமக்கல்:
நாமக்கல் உள்பட 5 சட்டசபை தொகுதிகளில் பதிவான தபால் வாக்குகளில் 1,247 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. ராசிபுரம் தொகுதியில் அனைத்து வாக்குகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தபால் வாக்குகள்
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி கடந்த 2-ந் தேதி நடந்தது. தேர்தலையொட்டி அரசு ஊழியர்கள், 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் அளித்தனர். இதில் நாமக்கல் தொகுதியில் 4 ஆயிரத்து 872 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன. இவற்றில் 188 வாக்குகள் செல்லாத வாக்குகள் என அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.
இதேபோல் சேந்தமங்கலம் தொகுதியில் 2 ஆயிரத்து 210 தபால் வாக்குகள் பதிவாகின. இவற்றில் 595 செல்லாத வாக்குகள் நிராகரிக்கப்பட்டது. திருச்செங்கோடு தொகுதியில் 2 ஆயிரத்து 760 தபால் வாக்குகள் பதிவாகின. இதில் 209 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. பரமத்திவேலூர் தொகுதியில் 3 ஆயிரத்து 944 தபால் வாக்குகள் பதிவாகின. இதில் 168 வாக்குகள் செல்லாத வாக்குகளாக நிராகரிக்கப்பட்டன.
ராசிபுரம்
குமாரபாளையம் தொகுதியில் 1,374 வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 87 வாக்குகள் செல்லாத வாக்குகளாக நிராகரிக்கப்பட்டன. மொத்தமாக 5 சட்டசபை தொகுதிகளில் 1,247 வாக்குகள் செல்லாத வாக்குகள் என அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டன.
ராசிபுரம் தொகுதியில் மொத்தம் பதிவான தபால் வாக்குகள் 3,251 ஆகும். இந்த தொகுதியில் மட்டும் அனைத்து தபால் வாக்குகளும் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. 1,250 டன் புழுங்கல்அரிசி
தஞ்சையில் இருந்து நெல்லைக்கு 1,250 டன் புழுங்கல்அரிசி சரக்குரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
2. 1,01,507 பேருக்கு கொரோனா தடுப்பூசி
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 1,01,507 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
3. கர்நாடகத்தில் 1,970 போக்குவரத்து ஊழியர்கள் பணி நீக்கம்; கே.எஸ்.ஆர்.டி.சி. தகவல்
கர்நாடகத்தில் 1,970 போக்குவரத்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக, கே.எஸ்.ஆர்.டி.சி. கூறியுள்ளது.
4. போக்குவரத்து விதிகளை மீறிய 1,061 பேர் மீது வழக்கு
போக்குவரத்து விதிகளை மீறிய 1,061 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
5. கடந்த 5 நாட்களில் கும்பமேளாவில் 1,700 பக்தர்களுக்கு கொரோனா தொற்று
கும்பமேளா பகுதியில் கடந்த 5 நாட்களில் மட்டும் 1,700 பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.