மாவட்ட செய்திகள்

எஸ்.வாழவந்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Hanging

எஸ்.வாழவந்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

எஸ்.வாழவந்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
எஸ்.வாழவந்தியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்,

நாமக்கல் தாலுகா கீரம்பூரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 34). தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (27). இந்த தம்பதிக்கு 6 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஜெயராமன் எஸ்.வாழவந்தியில் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் நேற்று ஜெயராமன் எஸ்.வாழவந்தியில் உள்ள ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பரமத்தி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர். 

பின்னர் ஜெயராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொழிலாளி தற்கொலை செய்தது தொடர்பாக பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. காதல் திருமணம் செய்த தொழிலாளி தற்கொலை
வேடசந்தூர் அருகே காதல் திருமணம் செய்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
3. போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
வளவனூர் அருகே போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. பரமத்திவேலூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்திவேலூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.