மாவட்ட செய்திகள்

சிறுமியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவருக்கு 5 ஆண்டு சிறை + "||" + 5 years imprisonment for posting pornographic picture of a girl on social networking sites

சிறுமியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவருக்கு 5 ஆண்டு சிறை
கோவை

கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்த ரகமத்துல்லாஹ் என்பவருடைய மகன் முகமது சபீர் (வயது 21). இவர் அந்த பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை போலீசில் புகார் செய்தார். 

இந்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் தீவிர விசாரணை நடத்தி முகமது சபீர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ந் தேதி கைது செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. 

இதில் சிறுமியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட முகமது சபீருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து முகமது சபீரை போலீசார் சிறையில் அடைத்தனர்.