துணை ராணுவப்படை வீரர்கள் ஊர் திரும்பினர். பூங்கொத்து கொடுத்து போலீசார் அனுப்பி வைத்தனர்.


துணை ராணுவப்படை வீரர்கள் ஊர் திரும்பினர். பூங்கொத்து கொடுத்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
x
தினத்தந்தி 4 May 2021 4:13 PM GMT (Updated: 4 May 2021 4:13 PM GMT)

துணை ராணுவப்படை வீரர்கள் ஊர் திரும்பினர். பூங்கொத்து கொடுத்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

குடியாத்தம்

குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு  கடந்த மாதம் 8-ந் தேதியில் இருந்து துணை ராணுவப்படை வீரர்கள் 97 பேர் துணை கமாண்டர் பங்கஜ்குமார்ராம் தலைமையில் பாதுகாப்பு பணியில் இருந்தனர். 

தற்போது வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றதால் பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவப்படை வீரர்களை ராஜஸ்தான் முகாமிற்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட்டு செல்வகுமார் ஆகியோர் சார்பில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு  மதிவாணன், உதவி கமாண்டர் பங்கஜ்குமார்ராம் பணிகளை பாராட்டி, பூங்கொத்து கொடுத்து அவர்களை வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன், டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன் உள்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

Next Story