மாவட்ட செய்திகள்

புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection

புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று

புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று
மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுக்கோட்டை, மே.5-
மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 232 ஆக அதிகரித்தது.  கொரோனா சிகிச்சையில் இருந்து 96 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து235 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 834 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 163 ஆக உள்ளது.

அரிமளம்
இதில் அரிமளம் ஒன்றியம் கீழப்பனையூர் அருகே உள்ள வையாபுரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 21 வயது ஆண், ஏம்பல் புது வீதி பகுதியை சேர்ந்த 32 வயது ஆண், கே.புதுப்பட்டி 25 வயது போலீஸ்காரர் ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தனியார் மற்றும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி
பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பெண் பரிதாபமாக இறந்தார்.
2. மேலும் 3.57 லட்சம் பேருக்கு தொற்று: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 கோடியாக அதிகரிப்பு
இந்தியாவில் புதிதாக 3.57 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியாக அதிகரித்துள்ளது.
3. அதிகரிக்கும் கொரோனா தொற்று: இந்தியாவுக்கு மருத்துவ நிபுணர் குழுவை அனுப்பியது இத்தாலி
கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு மருத்துவ நிபுணர் குழுவை இத்தாலி அனுப்பியது.
4. அரியலூரில் மேலும் 45 பேருக்கு தொற்று
அரியலூரில் மேலும் 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. மேலும் ஒரு முதியவர் கொரோனாவுக்கு பலி
மேலும் ஒரு முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார்.