மாவட்ட செய்திகள்

உல்லாசம் அனுபவித்து விட்டுஇளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவர் கைது + "||" + Man arrested for refusing to marry teenager

உல்லாசம் அனுபவித்து விட்டுஇளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவர் கைது

உல்லாசம் அனுபவித்து விட்டுஇளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்தவர் கைது
கைது
திண்டிவனம், 
திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ரஞ்சித்குமார் அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் ரஞ்சித்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆனதாக தகவல் அறிந்த அந்த இளம்பெண், ரஞ்சித்குமாரை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு ரஞ்சித்குமார் மறுப்பு தெரிவித்ததோடு, இளம்பெண்ணை ஆபாசமாக திட்டி, மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.