மாவட்ட செய்திகள்

மேல்மலையனூர் அருகேஏரியில் மனித எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்புபோலீசார் விசாரணை + "||" + Excitement as the human skeleton lay in the lake

மேல்மலையனூர் அருகேஏரியில் மனித எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்புபோலீசார் விசாரணை

மேல்மலையனூர் அருகேஏரியில் மனித எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்புபோலீசார் விசாரணை
பரபரப்பு
மேல்மலையனூர், 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே வளத்தி கிராமத்தில் உள்ள மாந்தாங்கல் ஏரியில் மனித எலும்புக்கூடு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதுபற்றி வளத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி. தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து எலும்பு கூட்டை பார்வையிட்டு, இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என அப்பகுதிமக்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்த நபர் கடந்த ஜனவரி மாதம் வீட்டை விட்டு மாயமான வளத்தி தனகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த சாமி என்கிற கோவிந்தசாமி (வயது 66) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவருடைய உறவினர் சிவராஜ் கொடுத்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மனித எலும்புக்கூடு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.