மாவட்ட செய்திகள்

பதிவான தபால் வாக்குகளில் 1,894 செல்லாதாவை + "||" + postel vote

பதிவான தபால் வாக்குகளில் 1,894 செல்லாதாவை

பதிவான தபால் வாக்குகளில் 1,894 செல்லாதாவை
திருப்பூர் மாவட்டத்தில் பதிவான தபால் வாக்குகளில் 1,894 செல்லாதாவையாக இருந்ததால் தள்ளுபடி செய்யப்பட்டது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் பதிவான தபால் வாக்குகளில் 1,894 செல்லாதாவையாக இருந்ததால் தள்ளுபடி செய்யப்பட்டது.
தபால் வாக்குகள்
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகளில் கடந்த மாதம் 6-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. 
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் சார்பில் வயதானவர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர், மாற்றுத்திறனாளிகள், போலீசார் உள்ளிட்டவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டது. அதன்படி இவர்களும் தபால் வாக்குகள் அளித்தனர்.  திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 15 ஆயிரத்து 5 தபால் வாக்குகள் பதிவாகின. இதில் செல்லாத வாக்குகள் பலவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1,894 வாக்குகள் செல்லாதவை
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் பதிவான தபால் வாக்குகளில் 1,894 வாக்குகள் செல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முன்மொழிவு படித்தை இணைக்காதது மற்றும் முன்மொழிவு படிவத்தில் அதிகாரி கையெழுத்து இல்லாதது. எந்த வேட்பாளருக்கு என டிக் செய்யாதது. வாக்காளர் வரிசை எண் இல்லாதது என்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த தபால் வாக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வேட்பாளர்களுக்கு 12 ஆயிரத்து 971 வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதுபோல் நோட்டாவுக்கு 140 வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்டத்தில் அதிகபட்சமாக தாராபுரத்தில் 514 தபால் வாக்குகளும், காங்கேயத்தில் 508, அவினாசியில் 338, உடுமலையில் 299, திருப்பூர் தெற்கில் 118, பல்லடத்தில் 98, மடத்துக்குளத்தில் 11, திருப்பூர் வடக்கில் 8 தபால் வாக்குகள் செல்லாதவை என தள்ளுபடி செய்யப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.