மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி ஒரே நாளில் 305 பேர் பாதிப்பு + "||" + Another one killed in Corona in Krishnagiri district 305 people were injured in a single day

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி ஒரே நாளில் 305 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி ஒரே நாளில் 305 பேர் பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியான நிலையில் ஒரே நாளில் 305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்தவர் 42 வயது ஆண். இருமல் மற்றும் மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்ட அவர் காஞ்சீபுரம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 22-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது தெரிய வந்தது.
அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் கடந்த 3-ந் தேதி இறந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:-

305 பேர் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 305 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 550 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் 16 ஆயிரத்து 200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சையில் குணமடைந்து 13 ஆயிரத்து 192 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 875 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 483 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,745 ஆக உயர்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 483 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடையை மீறி வேல் யாத்திரை: பா.ஜனதா மாநில தலைவர் முருகன், எச்.ராஜா உள்பட 3,106 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடையை மீறி வேல் யாத்திரை, பொதுக்கூட்டம் நடத்தியதாக பா.ஜனதா மாநில தலைவர் முருகன், எச்.ராஜா உள்பட 3,106 பேரை போலீசார் கைது செய்தனர்.