மாவட்ட செய்திகள்

பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு + "||" + traffic

பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
பல்லடத்தில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பல்லடம்
பல்லடத்தில் உள்ள கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மிகவும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இந்த நிலையில் நேற்று இந்த நெடுஞ்சாலையில் கிழக்கிலிருந்து மேற்காக வந்த தண்ணீர் லாரி ஒன்று மாணிக்காபுரம் சாலை பிரிவில் திரும்ப முயன்றபோது, லாரியின் அச்சு உடைந்தது. இதனால் லாரி பழுதாகி ரோட்டின் நடுவே நின்றது. இதனால், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு புறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார் லாரியை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் லாரியை நகர்த்த முடியவில்லை. இதையடுத்து, லாரி மெக்கானிக் ஒருவரை அழைத்து வந்து லாரியை பழுது பார்த்து, அப்புறப்படுத்தினர். இதனால் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.