மாவட்ட செய்திகள்

ராயக்கோட்டையில் 5½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் சிறுவன் உள்பட 2 பேர் கைது + "||" + ration rice seized

ராயக்கோட்டையில் 5½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் சிறுவன் உள்பட 2 பேர் கைது

ராயக்கோட்டையில் 5½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் சிறுவன் உள்பட 2 பேர் கைது
ராயக்கோட்டையில் 5½ டன் ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ராயக்கோட்டை அம்மா பூங்கா அருகே நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது பாலக்கோட்டில் இருந்து வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தினர். பின்னர் லாரியில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் லாரியில் 5½ டன் கடத்தல் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. 

கைது

இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சூளகிரி சாலையை சேர்ந்த சத்யராஜ் (வயது 28), மற்றும் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவர் என்பதும் தெரியவந்தது.  பின்னர் லாரியில் இருந்த 5½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 16 வயது சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்தனர்.