மாவட்ட செய்திகள்

ஊராட்சி ஒன்றிய என்ஜினீயருக்கு கொரோனா + "||" + engeenear

ஊராட்சி ஒன்றிய என்ஜினீயருக்கு கொரோனா

ஊராட்சி ஒன்றிய என்ஜினீயருக்கு கொரோனா
ஊராட்சி ஒன்றிய என்ஜினீயருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
ஊத்துக்குளி
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஈரோட்டை சேர்ந்த 38 வயதுடையவர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. உடல் நலக்குறைவுடன் அலுவலகம் வந்து சென்ற அவருக்கு தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவாயில் பூட்டப்பட்டு மூன்று நாட்களுக்கு அலுவலகம் செயல்படாது எனும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் அலுவலகம் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.