மாவட்ட செய்திகள்

துக்க வீட்டை சேர்ந்தவருக்கு கொரோனா: இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி + "||" + Corona Experiment Camp

துக்க வீட்டை சேர்ந்தவருக்கு கொரோனா: இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி

துக்க வீட்டை சேர்ந்தவருக்கு கொரோனா: இறுதி சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அதிர்ச்சி
திருப்பத்தூர் அருகே துக்கவீட்டை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.வைரவன்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியின் போது அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு உள்ளனர். கொரோனா பரவல் கால கட்டத்தில் பொதுமக்கள் கூடியதை அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சிவமணி, வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமாரிடம் அந்த கிராமத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்தார். அதன்படி துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் துக்க வீட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா ெதாற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மற்றவர்களுக்கு தொடர்ந்து பரிசோதனை நடந்து வருகிறது. துக்க வீட்டை சேர்ந்தவருக்கு கொரோனா என்பதை அறிந்ததும் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சியில் நடமாடும் கொரோனா பரிசோதனை முகாம்
சப்-கலெக்டர் அலுவலகத்தில் மீண்டும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். மேலும் பொள்ளாச்சியில் நடமாடும் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்படும் என்று சப்-கலெக்டர் வைத்திநாதன் தெரிவித்தார்.
2. கொரோனா பரிசோதனை முகாம்
கோவில்பட்டியில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.
3. கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு தொற்று உறுதி
கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. தியாகதுருகம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.