மாவட்ட செய்திகள்

தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்ததுநெல்லையில் தலைவர்கள் சிலை மீண்டும் திறக்கப்பட்டன + "||" + The statue of the leaders at Nellai was reopened

தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்ததுநெல்லையில் தலைவர்கள் சிலை மீண்டும் திறக்கப்பட்டன

தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்ததுநெல்லையில் தலைவர்கள் சிலை மீண்டும் திறக்கப்பட்டன
தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துவிட்டதால் நெல்லையில் மூடப்பட்ட தலைவர்களின் சிலைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
நெல்லை:
தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துவிட்டதால் நெல்லையில் மூடப்பட்ட தலைவர்களின் சிலைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

நடத்தை விதிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிவடைந்து உள்ளது. இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையொட்டி அரசியல் கட்சியினருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

முக்கிய வீதிகளில் இருந்த கட்சி தலைவர்களின் சிலைகளும் மூடப்பட்டன. நெல்லையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., இந்திரா காந்தி, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் அட்டையால் மூடப்பட்டிருந்தது.

மீண்டும் திறப்பு

இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்து விட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து நெல்லையில் தலைவர்களின் சிலையை சுற்றி அடைக்கப்பட்டிருந்த அட்டைகள், காகிதங்கள், துணிகள் நேற்று அகற்றப்பட்டன. பின்னர் அரசியல் கட்சி நிர்வாகிகள் அந்த சிலைகளை சுத்தம் செய்து மாலை அணிவித்தனர்.