மாவட்ட செய்திகள்

கீழடி அகழாய்வில் மூடியுடன் கிடைத்த மண்பானையில் பாசி மணிகள் இருந்தன + "||" + Excavation

கீழடி அகழாய்வில் மூடியுடன் கிடைத்த மண்பானையில் பாசி மணிகள் இருந்தன

கீழடி அகழாய்வில் மூடியுடன் கிடைத்த மண்பானையில் பாசி மணிகள் இருந்தன
கீழடி அகழாய்வில் மூடியுடன் கிடைத்த மண்பானையில் பாசிமணிகள் இருந்தன.
திருப்புவனம்,

பண்டைய காலம் முதலே தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை கீழடி அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கும் பொருட்கள் எடுத்துரைத்து வருகின்றன. சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடக்கின்றன. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் இந்த பணிகள் நடைபெற்று  வருகின்றன.கீழடியில் ஏற்கனவே பாசி, மணிகள், மண்பாண்ட ஓடுகள், சிறிய,பெரிய பானைகள் சேதமுற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. மேலும் தாயக்கட்டை, கல்லாலான விவசாய கருவி, காதில் அணியும் தங்க ஆபரண வளையம் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொண்டபோது ஒரு குழியில் முழுமையான சிறிய பானை மூடியுடன் சேதாரமில்லாமல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பாசி மணிகளும் அதில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளன.மற்றொரு குழியில் கட்டிடத்துக்கு பயன்படுத்தப்பட்ட பல வகையான கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பார்ப்பதற்கு சிறிய வாய்க்கால் போல் உள்ளது. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளும்போது இன்னும் பல பொருட்கள் கிடைக்கக்கூடும் எனவும் தெரியவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கீழடியில் பச்சை, சிவப்பு நிறத்தில் பாசிமணிகள் கண்டெடுப்பு
கீழடியில் பச்சை, சிவப்பு நிறத்தில் பாசிமணிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.