மாவட்ட செய்திகள்

நெல்லையில்100 டிகிரியில் தொடங்கிய அக்னி நட்சத்திரம் + "||" + Agni star that started at 100 degrees

நெல்லையில்100 டிகிரியில் தொடங்கிய அக்னி நட்சத்திரம்

நெல்லையில்100 டிகிரியில் தொடங்கிய அக்னி நட்சத்திரம்
நெல்லையில் 100 டிகிரியில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது.
நெல்லை:
நெல்லையில் 100 டிகிரியில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது.

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் நேற்று தொடங்கியது. இதையொட்டி நெல்லையில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. பிற்பகலில் மேக மூட்டமாகவும், அவ்வப்போது வெயிலும் அடித்தது.

இருந்த போதிலும் நெல்லையில் நேற்று வெயில் அளவு 100 டிகிரியாக பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் இந்த வெயிலின் தாக்கம் 107 டிகிரி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இளநீர் விற்பனை

இதனால் நண்பகல் நேரத்தில் பொது மக்கள் மர நிழலை தேடி நின்றனர். ஒரு சிலர் குடை பிடித்தபடி சென்றனர். மேலும் இளநீர், நுங்கு, பதனீர், கம்மங்கூழ் போன்ற குளிர்ச்சி தரக்கூடியவற்றை வாங்கி பருகினர். 

மேலும் குளிர்பான கடைகளுக்கு சென்று குளிர்ச்சியான பானங்களை வாங்கி குடித்து தாகத்தை தணித்தனர்.