மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டில் 13 பவுன் நகை, பணம் திருட்டு + "||" + 13 pound jewelery in locked house theft of money

பூட்டிய வீட்டில் 13 பவுன் நகை, பணம் திருட்டு

பூட்டிய வீட்டில் 13 பவுன் நகை, பணம் திருட்டு
பூட்டிய வீட்டில் 13 பவுன் நகை, பணம் திருடப்படடது.
மதுரை,மே
மதுரை சம்மட்டிபுரம் புதுவசந்தம் தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன் மனைவி செல்வி (வயது 58). இவர் வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து தெருவில் வசிக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து இருந்தது. அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து செல்வி எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார்.
அதில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு எனது வீட்டுச்சாவி தொலைந்து விட்டது. எனவே நான் மாற்றுச்சாவியை பயன்படுத்தி வந்தேன். இந்த நிலையில் தான் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது என்று கூறியிருந்தார்.
அதன்அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.