நெல்லை அருகே கங்கைகொண்டான் ரெயில் நிலையத்தில் புதிய சரக்கு இறங்குதளம் 1,300 டன் கோதுமை கையாளப்பட்டது


நெல்லை அருகே  கங்கைகொண்டான் ரெயில் நிலையத்தில்  புதிய சரக்கு இறங்குதளம்  1,300 டன் கோதுமை கையாளப்பட்டது
x
தினத்தந்தி 4 May 2021 7:15 PM GMT (Updated: 4 May 2021 7:15 PM GMT)

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் ரெயில் நிலையத்தில் சரக்கு இறங்கு தளம் அமைக்கப்பட்டது. இங்கு முதன்முறையாக 1,300 டன் கோதுமை இறக்கப்பட்டன.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் ரெயில் நிலையத்தில் சரக்கு இறங்கு தளம் அமைக்கப்பட்டது. இங்கு முதன்முறையாக 1,300 டன் கோதுமை இறக்கப்பட்டன.

சரக்கு இறங்குதளம்

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் மேற்கு பகுதியில் சரக்கு இறங்குதளம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ரெயில் பெட்டிகளில் கொண்டு வரப்படும் அரிசி, கோதுமை, உர மூட்டைகள் இறக்கப்படும். அவ்வாறு கொண்டு வரப்படும் மூட்டைகள் லாரிகளில் ஏற்றி பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும்.

இங்கு இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளதாலும் பயணிகள் 
போக்குவரத்துக்கு கூடுதல் பிளாட்பாரங்கள் தேவைப்படுவதாலும் நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் ரெயில் நிலையத்தில் கூடுதலாக சரக்கு இறங்கு தளம் (கூட்ஸ் செட்) அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரட்டை ரெயில் பாதை அமைக்கப்பட்ட போது இந்த சரக்கு இறங்கு தளமும் அமைக்கப்பட்டது.

கோதுமை வருகை

இந்த நிலையில் முதன்முறையாக இந்த சரக்கு இறங்குதளத்தில் கோதுமை மூட்டைகள் இறக்கப்பட்டன.

வடகிழக்கு ரெயில்வே லக்னோ கோட்டம் கோண்டா கச்சாக்ரி என்ற ரெயில் நிலையத்தில் இருந்து வந்த 1,300 டன் கோதுமை மூட்டைகள் சரக்கு ரெயிலில்  கொண்டு வரப்பட்டது.
பின்னர் ரெயில் பெட்டிகளில் இருந்து கோதுமை மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிக்கு இறக்கினர். அந்த லாரிகள் மூலம் கங்கைகொண்டான், கோவில்பட்டி பகுதியில் உள்ள மாவு ஆலைக்கு கோதுமை மூட்டைகள் கொண்டு செல்லப்பட்டன.

Next Story