ராமநாதபுரத்தில் கொரோனா தொற்றுக்கு தம்பதி உள்பட 7 பேர் பலி


ராமநாதபுரத்தில் கொரோனா தொற்றுக்கு தம்பதி உள்பட 7 பேர் பலி
x
தினத்தந்தி 4 May 2021 7:19 PM GMT (Updated: 4 May 2021 7:19 PM GMT)

ராமநாதபுரத்தில் கொரோனா தொற்றுக்கு தம்பதி உள்பட 7 பேர் பலியானார்கள்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் கொரோனா தொற்றுக்கு தம்பதி உள்பட 7 பேர் பலியானார்கள்.

7 பேர் சாவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை போலவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி தினமும் பலர் பலியாகி வருகின்றனர். தினமும் 5-க்கும் அதிகமானோர் பலியாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 இந்நிலையில் நேற்று ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரம் நகர் பகுதியை சேர்ந்த 62 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், அவரது மனைவியான 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் அடுத்தடுத்து தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
இதுதவிர ராமநாதபுரம் மற்றும் திருப்புல்லாணி, முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்த மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். ராமநாதபுரத்தில் நேற்று ஒரே நாளில் 3 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.

முககவசம் அணியுங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. எனவே பொதுமக்கள் அவசியம் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய உடன் கைகளில் கிருமிநாசினி கொண்டு கழுவுங்கள். தொடர்ந்து முன் எச்சரிக்கையுடன் இருந்தால் தான் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்கள் தற்காத்து கொள்ள முடியும். அரசு விதித்த முறைகளை கடைபிடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Related Tags :
Next Story