மாவட்ட செய்திகள்

மதுரையில் புதிதாக 787 பேருக்கு கொரோனா 640 பேர் குணம் அடைந்தனர் + "||" + Corona for 787 newcomers in Madurai

மதுரையில் புதிதாக 787 பேருக்கு கொரோனா 640 பேர் குணம் அடைந்தனர்

மதுரையில் புதிதாக 787 பேருக்கு கொரோனா 640 பேர் குணம் அடைந்தனர்
மதுரையில் நேற்று புதிதாக 787 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 640 பேர் குணம் அடைந்தனர். 5 பேர் உயிரிழந்தனர்.
மதுரை, மே.
மதுரையில் நேற்று புதிதாக 787 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 640 பேர் குணம் அடைந்தனர். 5 பேர் உயிரிழந்தனர்.
கொரோனா வைரஸ்
மதுரையில் நேற்று ஒரே நாளில் 787 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 
நேற்று 7 ஆயிரத்து 750 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 787 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 515 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 33 ஆயிரத்து 669 ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல், நேற்று 640 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 480 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம், இதுவரை 28 ஆயித்து 539 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். தற்போது, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 4585 ஆக உயர்ந்துள்ளது.
5 பேர் உயிரிழப்பு
மதுரையில் கடந்த சில தினங்களாக உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றும் மதுரையில் 5 பேர் உயிரிழந்தனர். மதுரையை சேர்ந்த 57, 62, 52 வயது ஆண்கள், 85 வயது முதியவர் மற்றும் 25 வயது பெண் ஆகியோர் இறந்தனர். அவர்களில் 2 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும், ஒருவர் ரெயில்வே ஆஸ்பத்திரியிலும் உயிரிழந்தனர். இதன் மூலம் மதுரையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 545ஆக உயர்ந்துள்ளது.