மாவட்ட செய்திகள்

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து + "||" + Sudden fire at a match factory

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து
சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் எந்திரங்கள் எரிந்து நாசமாயின
சிவகாசி
சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் எந்திரங்கள் எரிந்து நாசமாயின.
தீப்பெட்டி ஆலை
சிவகாசி காயாம்பு நகரை சேர்ந்தவர் காளிராஜன். இவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை சிவகாசி பஸ் நிலையம் அருகில் உள்ள புதுத்தெருவில் இயங்கி வருகிறது. இந்த தீப்பெட்டி ஆலையில் குறைந்த அளவு தொழிலாளர்கள் மட்டும் பணியில் அமர்த்தி எந்திரங்களை கொண்டு தீப்பெட்டிகளை தயாரித்து வந்தனர். நேற்று வழக்கம்போல் தீப்பெட்டி தயாரிக்கும் பணி நடைபெற்றது. 
மாலையில் பணி முடிந்து தொழிலாளர்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் ஆலையில் இருந்து புகை வெளியேறியது. இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்புவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். 
எரிந்து நாசம்
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது தீப்பெட்டிகள் தயாரிக்கும் எந்திரங்கள் எரிந்து நாசமானது தெரியவந்தது. தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் தீப்பெட்டி ஆலைக்கு வந்து விபத்துக்கான காரணம் குறித்தும், சேத மதிப்பு குறித்தும் விசாரித்து வருகின்றனர். தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. தீ விபத்து தடுப்பு செயல்விளக்கம்
கொரோனா சிகிச்சை பிரிவில் தீ விபத்து தடுப்பு செயல்விளக்கம் நடைபெற்றது.
2. ஆப்கானிஸ்தானில் லாரி தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்து உள்ளனர்.
3. குஜராத் தீ விபத்து: முதல் மந்திரி தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு; பிரதமர் மோடி இரங்கல்
குஜராத் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்த 16 பேரின் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவி அறிவித்து உள்ளார்.
4. குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து; பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 நோயாளிகள் உள்பட 16 பேர் உயிரிழந்து உள்ளனர்.
5. குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் தீ விபத்து; 12 பேர் உயிரிழப்பு
குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.