மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி + "||" + 3 killed

கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகினர்
கரூர்
 தமிழகத்தில் கொரோனா 2- வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தினமும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு இருந்தும் கொரோனா தொற்று குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட தகவலின்படி கரூர் மாவட்டத்தில் 264 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது தெரிய வந்தது. அவர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பழைய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் கொரோனாவுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 96 பேர் குணமடைந்ததால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி 1,350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வெவ்வேறு சம்பவங்களில் கொத்தனார் உள்பட 3 பேர் பலி
வெவ்வேறு சம்பவங்களில் கொத்தனார் உள்பட 3 பேர் பலியானார்கள்.