மாவட்ட செய்திகள்

இளம்பெண் தூக்குப்போட்டு சாவு + "||" + Teenage death by hanging

இளம்பெண் தூக்குப்போட்டு சாவு

இளம்பெண் தூக்குப்போட்டு சாவு
மானூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மானூர்:

மானூர் அருகே உள்ள கந்தசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகள் சுகன்யா (வயது 19). இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு திருமணம் பேசி முடித்துள்ளனர்.

சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்த சுகன்யா, கழிப்பறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.