மாவட்ட செய்திகள்

சேதமடைந்த மின்மாற்றி சீரமைப்பு + "||" + Echo of Daily Thanthi news Damaged transformer repair

சேதமடைந்த மின்மாற்றி சீரமைப்பு

சேதமடைந்த மின்மாற்றி சீரமைப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சேதமடைந்த மின்மாற்றி சீரமைக்கப்பட்டது.
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் திருமானூர் செல்லும் சாலையின் இடையே மின்மாற்றி உள்ளது. கடந்த மாதம் 3-ந் தேதி லாரி மோதியதில் அந்த மின்மாற்றி முற்றிலுமாக சேதமடைந்தது. இதையடுத்து அந்த மின்மாற்றியை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணி விரைவாக நடைபெறாததால், அந்த மின்மாற்றியில் இருந்து பெறப்படும் மின்சாரத்தை நம்பி 100 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்ச முடியாமல் பயிர்கள் காய்ந்து வருவதாக வருத்தத்துடன் தெரிவித்தனர். இதனால் உடனடியாக அந்த மின்மாற்றியை சீரமைக்கக்கோரி ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி மின்வாரிய ஊழியர்கள் மின்மாற்றியை சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதையடுத்து அந்த மின்மாற்றி சீரமைக்கப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்களுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வரத்துக்கால்வாய் சீரமைப்பு
தண்ணீர் தினத்தை முன்னிட்டு எஸ்.புதூர் அருகே வரத்துக்கால்வாய் சீரமைக்கும் பணி நடந்தது.
2. விசுவக்குடி அணையில் சேதமடைந்த கரைப்பகுதிகள் சீரமைப்பு
விசுவக்குடி அணையில் சேதமடைந்த கரைப்பகுதிகள் சீரமைக்கப்பட்டது.
3. கரூர் செட்டிப்பாளையம் பூங்கா சீரமைப்பு
கரூர் அருகே உள்ள செட்டிப்பாளையம் பூங்காவை மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்