மாவட்ட செய்திகள்

விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் + "||" + Special anointing for Natarajar

விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தோகைமலை
தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்.டி.மலையில் உள்ள மலை மீது அமைந்திருக்கும் விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத திருவோண நட்சத்திர சிறப்பு அபிஷேகமும், தேய்பிறை கால பைரவருக்கு அஷ்டமி பூஜையும் நடைபெற்றது. பூஜைகள் கோவில் அர்ச்சகர் கந்த சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அஷ்டமி தேய்பிறை பூஜை கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து பூசணிக்காய் மற்றும் தேங்காய் விளக்கு ஏற்றப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.