மாவட்ட செய்திகள்

இனாம்குளத்தூர் அருகே அ.தி.மு.க. பிரமுகருக்கு அடி-உதை;தி.மு.க.நிர்வாகி உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு + "||" + Foot-kick to AIADMK executive

இனாம்குளத்தூர் அருகே அ.தி.மு.க. பிரமுகருக்கு அடி-உதை;தி.மு.க.நிர்வாகி உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

இனாம்குளத்தூர் அருகே அ.தி.மு.க. பிரமுகருக்கு அடி-உதை;தி.மு.க.நிர்வாகி உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
இனாம்குளத்தூர் அருகே அ.தி.மு.க. பிரமுகருக்கு அடி-உதை விழுந்தது. இதுதொடர்பாக தி.மு.க. நிர்வாகி உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இனாம்குளத்தூர் அருகே அ.தி.மு.க. பிரமுகருக்கு அடி-உதை;
தி.மு.க.நிர்வாகி உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

சோமரசம்பேட்டை, மே.5-
இனாம்குளத்தூர் அருகே உள்ள பெரியஆலம்பட்டி புதூரை சேர்ந்தவர் பச்சைமுத்து (வயது 44). இவர் அ.தி.மு.க. கிளை செயலாளராக உள்ளார். 
இவரின் வீட்டின் அருகே தி.மு.க. நிர்வாகி சார்லஸ் என்பவர் தி.மு.க. வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக தனது நண்பர்கள் பாக்கியராஜ், பொன்னர், ரகுபதி, ஸ்டீபன், சரவணன், இளையராஜா, சுப்பிரமணி ஆகியோருடன் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளார். இதை அறிந்த இனாம்குளத்தூர் போலீசார் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
சார்லஸின் நண்பரான இளையராஜா என்பவர் நீ தான் போலீசாரை வரசொல்லி எங்கள் மீது புகார் கூறியுள்ளாய் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பச்சமுத்துவை அடித்து உதைத்துள்ளனர் இதனால் காயம்பட்ட பச்சமுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் தி.மு.க. நிர்வாகி உள்பட 8 பேர் மீது  இனாம்குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.