மாவட்ட செய்திகள்

நிறைமாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Fullterm pregnant woman commits suicide by hanging

நிறைமாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை

நிறைமாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
குன்னம் அருகே நிறைமாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குன்னம்:

கர்ப்பிணி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஜமீன் பேரையூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன். லாரி டிரைவர். இவரது மனைவி சரிதா(வயது 19). இவர்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது சரிதா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சரிதா வீட்டின் அருகே உள்ள மரத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து சரிதாவின் தாய் பாப்பா கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே சரிதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி ஓராண்டே ஆவதால் இந்த சம்பவம் குறித்து சப்-கலெக்டர் பத்மஜா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. வாலிபர் தற்கொலை
பேட்டை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
2. பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
காரைக்குடியில் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. குல தெய்வ கோவில் அருகே டிராவல்ஸ் அதிபர் தற்கொலை
கடன் தொல்லை காரணமாக குல தெய்வ கோவில் அருகே டிராவல்ஸ் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
5. தொழிலாளி தற்கொலை
கடையநல்லூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.