மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா + "||" + Corona for 35 people in one day

ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா

ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான காமராஜபுரம், வேலாயுதநகர், பகுத்தறிவு நகர், செங்குந்தபுரம், வடக்குத்தெரு, கரடிகுளம், சமயபுரம் தெரு, மலங்கன்குடியிருப்பு, புதுத்தெரு, அண்ணாநகர், என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 20 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதையொட்டி நேற்று ஜெயங்கொண்டம் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்காத 5 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதமும், முக கவசம் அணியாதது தொடர்பாக 20 கடைகளுக்கு தலா ரூ.200 அபராதமும் விதித்தனர். இதுகுறித்து நகராட்சி ஆணையர் சுபாஷினி கூறுகையில், பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரவேண்டும். நாளை (வியாழக்கிழமை) கீழக்குடியிருப்பு மற்றும் மேலக்குடியிருப்பு கிராமங்களில் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் அமைக்கப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு, கேட்டுக்கொண்டார். நாளை  முதல் அரசின் கூடுதல் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் பட்சத்தில் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும், என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கட்டுக்கடங்காத கொரோனாவால் ஒரே நாளில் 168 பேர் பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டுக்கடங்காத கொரோனாவிற்கு ஒரே நாளில் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று மற்றும் நிமோனியா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2. அரியலூரில் புதிதாக 105 பேருக்கு தொற்று
அரியலூரில் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. 3 பேருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
4. அரியலூரில் 7 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூரில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. பெரம்பலூரில் கொரோனாவால் ஒருவர் பாதிப்பு
பெரம்பலூரில் கொரோனாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை