மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி + "||" + Another woman killed for Corona

கொரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி

கொரோனாவுக்கு மேலும் ஒரு பெண் பலி
பெரம்பலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒரு பெண் பரிதாபமாக இறந்தார்.
பெரம்பலூர்:

பலி எண்ணிக்கை உயர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து நேற்று முன்தினம் வரை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 517 பேருக்கு ெகாரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில் 2,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,491 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரம்பலூர் கல்யாண் நகரை சேர்ந்த 75 வயதான மூதாட்டி இறந்ததாக, சுகாதாரத்துறையினர் நேற்று அறிவித்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
31 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் 62 பேருக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 672 பேருக்கும் என மொத்தம் 734 பேருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது. இதில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பெரம்பலூர் ஒன்றியத்தில் 1,168 பேரும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 518 பேரும், வேப்பூர் ஒன்றியத்தில் 602 பேரும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 488 பேரும் என மொத்தம் 2,776 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் தற்போது 256 பேர் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மதனகோபாலபுரம், மேட்டுத்தெரு, டால்பின் நகர், துறைமங்கலம், தீயணைப்பு வளாகப்பகுதி, எளம்பலூர், சிறுவாச்சூர், களரம்பட்டி, கொளப்பாடி, இரூர் ஊராட்சிகள், லெப்பைக்குடிகாடு, குரும்பலூர் பேரூராட்சி பகுதிகள் கொரோனா தொற்று பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 34 ஆயிரத்து 930 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் புதிதாக 34 பேருக்கு கொரோனா; 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகத்தில் இன்று 103 பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் இன்று 103 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. தமிழகத்தில் இன்று 35 பேருக்கு கொரோனா; 31 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு இல்லை
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 22 பேர் மட்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
4. சென்னையில் 28 பேர் உள்பட தமிழகத்தில் இன்று 44 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று 44 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
5. இந்தியாவில் மேலும் 2,897- பேருக்கு கொரோனா- 54 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,897- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.