மாவட்ட செய்திகள்

புரட்டாசி பட்டத்தில் விவசாயிகள் சாகுபடி மேற்கொள்வதற்கான விதை தேவையை பூர்த்தி செய்வதில் வேளாண்மைத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். + "||" + bodipatti seats

புரட்டாசி பட்டத்தில் விவசாயிகள் சாகுபடி மேற்கொள்வதற்கான விதை தேவையை பூர்த்தி செய்வதில் வேளாண்மைத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

போடிப்பட்டி
புரட்டாசி பட்டத்தில் விவசாயிகள் சாகுபடி மேற்கொள்வதற்கான விதை தேவையை பூர்த்தி செய்வதில் வேளாண்மைத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விதைப் பண்ணைகள்
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் புரட்டாசி பட்டத்தில் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி மேற்கொள்கின்றனர். அதுபோல தானியங்கள் சாகுபடியிலும் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே விவசாயிகளுக்குத் தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது வேளாண்மைத்துறையினரின் பொறுப்பாக உள்ளது. அதனடிப்படையில் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் விதைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு விதை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது நிலக்கடலை விதைப்பண்ணைகளில் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-விதைப்பு முதல் அறுவடை வரை ஒவ்வொரு நிலைகளிலும் விதைப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
சான்று பெற்ற விதைகள்
அறுவடைக்குப் பின்னரும் விதைகளில் கலவன், முளைப்புத் திறன், ஈரப்பதம் உள்ளிட்ட அனைத்து விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. முடிவில் தரமான சான்று பெற்ற விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. தற்போது உடுமலை பகுதியில் 2 ஏக்கரில் கம்பு விதைப்பண்ணைகளும், 3 ஏக்கரில் உளுந்து விதைப்பண்ணைகளும், 20 ஏக்கரில் நிலக்கடலை விதைப்பண்ணைகளும், 2.5 ஏக்கரில் பாசிப்பயறு விதைப்பண்ணைகளும் அமைக்கப்பட்டுள்ளது. 
இதுதவிர நெல் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டு அறுவடை முடிந்து 15 டன் அளவுக்கு அறுவடை செய்யப்பட்ட விதைகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அறுவடை செய்யப்பட்ட கொண்டைக் கடலை விதைகள் 2.5 டன் அளவுக்கு விரைவில் தயாராகி விடும். புரட்டாசி பட்டம் எனப்படும் ரபி பருவத்துக்கான விதை தேவையைப்பூர்த்தி செய்யும் வகையில் ஆண்டுதோறும் கரீப் பருவத்தில் உளுந்து உள்ளிட்ட விதைப் பண்ணைகளை அமைத்து விதைகளை தயார் செய்து விடுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.